வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க வேண்டும்-ஆம்ஆத்மி கட்சி- வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்
- ஆம்ஆத்மி கட்சி மாநிலசெயலாளர் ரவி சீனிவாசன், மக்கள் வாழ்வுரிமை இயக்க மாநில செயலாளர் ஜெகன்நாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளது.
- புதுவை வாக்குச்சாவடிகளில், தமிழகம்-ஆந்திரா மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் வாக்காளர்களாகவும், நலத்திட்ட பயனாளிகளாகவும் உள்ளனர்.
புதுச்சேரி:
ஆம்ஆத்மி கட்சி மாநிலசெயலாளர் ரவி சீனிவாசன், மக்கள் வாழ்வுரிமை இயக்க மாநில செயலாளர் ஜெகன்நாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:-
புதுவை வாக்குச்சா–வடிகளில், தமிழகம்-ஆந்திரா மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் வாக்காளர்களாகவும், நலத்திட்ட பயனா–ளிகளாகவும் உள்ளனர்.
இவர்கள் வாக்களிப்பது, அரசின் பண பலன்களை 2 இடங்களில் பெறுவது சட்டவிரோதம். மாநில தேர்தல் ஆணையம், ஆதார் அட்டையுடன், வாக்காளர் அட்டையை இணைத்திட வேண்டும். இதனால் ஜனநாயக குளறுபடிகள் நீக்கப்படு–வதுடன், நலத்திட்டங்களின் பணப்பலன்கள் வீண் விரையம் ஆகாமல் தடுக்கப்படும். அரசு துறைகளில் நிதி வீணாவது தடுக்கப்படும்.
அரசு கடும் நிதி நெருக்க–டியிலிருந்து குறைந்தபட்சம் மீள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எனவே மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையை, ஆதார் அட்டையுடன் இணைத்திட விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.