புதுச்சேரி

பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி.

அன்னை வித்யா மந்திரி பள்ளி ஆண்டு விழா

Published On 2023-04-07 14:12 IST   |   Update On 2023-04-07 14:12:00 IST
  • புதுவை அருகே திருபுவனை அன்னை வித்யா மந்திர் பள்ளியின் 11- வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
  • பள்ளி மாணவர்களின் பல்வேறு விளையாட்டுகள், நடனம், தனித்திறமை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புதுச்சேரி:

திருபுவனை அன்னை வித்யா மந்திர் பள்ளியின் 11- வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளியின் தாளாளர் தனசெல்வம் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியை விஜ யலட்சுமி தனசெல்வம் அனை வரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தி னர்களாக புதுவை சுயநிதி தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர்.ரங்கநாதன், பொருளாளர் டாக்டர். சிவசுப்பிரமணி, அப்பு ஆங்கிலப் பள்ளி தாளாளர் சுப்பிரமணியன், இளமதிழகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர்,

எம்.ஜே.எப் லையன். சிவகாந்தன், தியாகராஜன், ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்கள். பள்ளியின் ஆசிரியை கமலி ஆண்டறிக்கை வாசித்தார்.

அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களின் பல்வேறு விளையாட்டுகள், நடனம், தனித்திறமை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் அருள்மொழி, கவிதா, பாக்கியலட்சுமி, வனிதா, சத்தியமூர்த்தி மற்றும் ஊர் பிரமுகர்கள் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவினை பள்ளியின் ஆசிரியை சாந்தினி தொகுத்து வழங்கினார். விழாவின் முடிவில் ஆசிரியை நர்மதா நன்றி கூறினார்.

Tags:    

Similar News