புதுச்சேரி
- கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்.
- உப்பளம் தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் சக்திவேல், அகிலன், விநாயகம், பாஸ்கல், கவி, மோரிஸ், கார்த்தி, ஆகியோர் உடன் இருந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் தொகுதி உட்பட்ட வாணரப்பேட்டை தாமரை நகர் பகுதியில் நடைபெற்று வரும் கழிவு நீர் வாய்க்காலையொட்டி அச்சுக்கல் பதிக்கும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அப்பகுதியில் வசித்து வந்த மறைந்த சுதந்திர போராட்ட தியாகி பெரியசாமியின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து தியாகி பெரியசாமியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் திப்புராயபேட்டை பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு புத்தக பைகளை கென்னடி வழங்கினார்.
நிகழ்ச்சியின் போது உப்பளம் தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் சக்திவேல், அகிலன், விநாயகம், பாஸ்கல், கவி, மோரிஸ், கார்த்தி, ஆகியோர் உடன் இருந்தனர்.