புதுச்சேரி

தேசிய கருப்பு பட்டை மற்றும் சான்றிதழ்களை மாநில கூடோ சங்கத் தலைவர் வளவன் வழங்கிய காட்சி.

தேசிய அளவிலான கூடோ போட்டியில் புதுவை வீரர்கள் தேர்வு

Published On 2023-04-10 10:51 IST   |   Update On 2023-04-10 10:51:00 IST
  • தேசிய அளவில் மும்பையில் நடைபெறும் கூடோ போட்டிக்கான வீரர்கள் வீராங்கனைகள் தேர்வு நடைபெற்றது.
  • கூடோ பயிற்சியாளர்கள் செல்வம் செந்தில், ஆறுமுகம் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

புதுவை மாநில கூடோ தற்காப்பு கலை சங்கத்தின் சார்பில் கூடோ பயிற்சி முகாம் மற்றும் தேசிய அளவில் மும்பையில் நடைபெறும் கூேடா போட்டிக்கான வீரர்கள் வீராங்கனைகள் தேர்வு நடைபெற்றது.

இதில் புதுவை மாநிலத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட வீரர்கள் தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். பின்பு சிறப்பாக பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள் பாகூர் பாலச்சந்தர், அசோக், செந்தில் வேல் ஆகியோருக்கு தேசிய கருப்பு பட்டை மற்றும் சான்றிதழ்களை மாநில கூடோ சங்கத் தலைவர் வளவன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு சங்க செயலாளர் சந்தோஷ் குமார் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் கூடோ பயிற்சியாளர்கள் செல்வம் செந்தில், ஆறுமுகம் கலந்து கொண்டனர். முடிவில் துணைத் தலைவர் ராஜ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News