புதுச்சேரி
மடுகரையில் அடிப்படை வசதிகள் கோரி கையெழுத்து இயக்கம்
- நிர்வாகிகள் கலை, கமல், சுரேஷ், தமிழரசி, கிருஷ்ணவேணி, அய்யப்பன், சிவசரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- புதுத்தெருவில் சைடு வாய்க்கால் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி பொது மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
புதுச்சேரி:
சுசி கம்யூனிஸ்ட் மடுகரை கிளை சார்பில் மந்தைவெளி திடலில் நெட்டப்பாக்கம் தொகுதி மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி கையெழுத்து இயக்கம் நடந்தது.
மடுகரை கிளை செயலாளர் ஜமாலுதீன் தலைமை வகித்தார். ஆனந்தன் முன்னிலை வகித்தார். கையெழுத்து இயக்கத்தை மாநில செயலாளர் லெனின்துரை தொடங்கி வைத்தார். ஏ.ஐ.யூ.டி.யூ.சி மாநில செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் கலை, கமல், சுரேஷ், தமிழரசி, கிருஷ்ணவேணி, அய்யப்பன், சிவசரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மடுகரை பட்டாம்பாக்கம் சாலைபயில் கோழிக்கறி கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். சிறு வந்தாடு மெயின் ரோட்டில் பெரிய வாய்க்காலை சுத்தப்படுத்த வேண்டும். கொசு மருந்து அடிக்க வேண்டும். புதுத்தெருவில் சைடு வாய்க்கால் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி பொது மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.