புதுச்சேரி

கைது செய்யப்பட்ட அழகுசுந்தரத்தையும் பறிமுதல் செய்யப்பட்ட வேனையும் படத்தில் காணலாம்.

ரேசன் அரிசி கடத்தி வந்தவர் கைது

Published On 2022-10-14 04:55 GMT   |   Update On 2022-10-14 04:55 GMT
  • திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு அடுத்த புளிச்சபள்ளம் கிராமம் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் அழகுசுந்தரம்.
  • அப்போது ஆம்னி வேனில் புளிச்சபள்ளம்-புதுவை பைபாஸ் சாலையில் அழகுசுந்தரம் ஆம்னி வாகனத்தில் ரேஷன் அரிசியை கடத்திச் செல்வதை அறிந்த போலீசார் அவரை சுற்றி வளைத்தனர்.

புதுச்சேரி:

திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு அடுத்த புளிச்சபள்ளம் கிராமம் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் அழகுசுந்தரம் (வயது 52).

இவர் தமிழக பகுதிகளில் ரேஷன் அரிசி வாங்கும் பொது மக்களிடம் குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி புதுவை பகுதியில் உள்ள ஓட்டல்களில் குறிப்பாக சாலையோரத்தில் உள்ள நேர ஓட்டல்களில் அதிக விலைக்கு விற்பதற்காக விழுப்புரம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரேகா மதிக்கு புகார் வந்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் தலைமையிலான உணவுப் பொருள் கடத்தல் பிரிவு போலீசார் திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதியில் முகாமிட்டு அழகுசுந்தரம் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

அப்போது ஆம்னி வேனில் புளிச்சபள்ளம்-புதுவை பைபாஸ் சாலையில் அழகுசுந்தரம் ஆம்னி வாகனத்தில் ரேஷன் அரிசியை கடத்திச் செல்வதை அறிந்த போலீசார் அவரை சுற்றி வளைத்தனர்.

அவரிடம் தமிழக பகுதி ரேஷன் அரிசி 650 கிலோ இருந்தது. அவரை கைது செய்த போலீசார் அவர் கடத்திய ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News