புதுச்சேரி

இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிச் சுற்று சுவருக்கு முட்டுக்கொடுக்கப்பட்டுள்ள காட்சி.

அரசு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாயம்

Published On 2023-06-24 05:47 GMT   |   Update On 2023-06-24 05:47 GMT
  • உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  • பள்ளியின் சுற்றுச்சுவர் முழுவதும் இடிந்து விழாமல் இருக்க சுற்றுச்சுவருக்கு முட்டு க்கொடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுவை அரியாங்குப்பம் மாதா கோவில் எதிரே அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

புதுவை மாநிலத்திலேயே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 2 பள்ளியில் இந்த பள்ளியும் ஒன்று. பல்வேறு சாதனைகளை படைத்து வரும் இந்த பள்ளி மிகவும் பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

பழமையான இந்த பள்ளியின் கட்டிடங்கள் மிகவும் பலவீனமாக உள்ளது. தூண்கள் பலவீன மாக உள்ளது. மேற்கூரைகள் அவ்வப்போது பெயர்ந்து விழுந்து வருகிறது.

எனவே இந்த பள்ளியை அருகில் உள்ள சிறார் காப்பக இடத்தோடு இணைத்து புதிதாக கட்டித்தர வேண்டும் என பெற்றோர்களும், அப்பகுதி மக்களும் கல்வித்துறைக்கும், அரசுக்கும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் பலவீனமடைந்து முழுமையாக சரிந்துள்ளது. பள்ளியின் சுற்றுச்சுவர் முழுவதும் இடிந்து விழாமல் இருக்க சுற்றுச்சுவருக்கு முட்டு க்கொடுக்கப்பட்டுள்ளது.

இது பள்ளிக்கு வெளியே சாலையில் செல்வோருக்கு பேராபத்தை விளைவிக்கும் அபாயத்தை ஏற்படுத்தி யுள்ளது. பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி அவலத்தை கண்டித்து அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களையும் நடத்த தயாராகி வருகின்றனர்.

Tags:    

Similar News