புதுச்சேரி

விவேகானந்தா பள்ளி ஆண்டு விழாவில் மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சான்றிதழ் வழங்கிய காட்சி.

விவேகானந்தா பள்ளி ஆண்டு விழா-முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்பு

Published On 2023-02-25 10:41 IST   |   Update On 2023-02-25 10:41:00 IST
  • விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியின் 37-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
  • மாணவ- மாணவிகள் மற்றும் இலக்கிய மன்ற விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கும் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.

புதுச்சேரி:

லாஸ்பேட்டை செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியின் 37-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் செல்வ கணபதி எம்.பி. தலைமை தாங்கினார். பள்ளி முதன்மை முதல்வர் பத்மா ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி முதல்வர் கீதா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு இறுதித்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தங்கக்காசு மற்றும் பரிசுகளை வழங்கினார். பொதுத்திறன் அடிப்படையில் பள்ளியில் எல்.கே.ஜி.முதல் பிளஸ்-2 வரை உள்ள மாணவர்களுக்கும், பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளை காட்சிப்படுத்திய மாணவ- மாணவிகள் மற்றும் இலக்கிய மன்ற விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கும் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியை பூர்ணிமா நன்றி கூறினார்.

Tags:    

Similar News