புதுச்சேரி

சாதனை படைத்த மாணவ-மாணவிகளை விவேகானந்தா கல்வி குழுமத்தின் தாளாளர் செல்வகணபதி எம்.பி பாராட்டிய காட்சி.

விவேகானந்தா வித்யா பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை

Published On 2022-07-24 05:38 GMT   |   Update On 2022-07-24 05:38 GMT
  • புதுவை செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா வித்யாலயாபள்ளி 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் 100ள சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
  • 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் பங்கேற்ற 24 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

புதுச்சேரி:

புதுவை செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா வித்யாலயாபள்ளி 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் 100ள சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த ஆண்டு நடைபெற்ற 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் பங்கேற்ற 24 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

மாணவி ஆர்த்தி 500-க்கு 466 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தை பிடித்தார். மாணவர் சஞ்சய் 461 மதிப்பெண்களுடன் 2-வது இடத்தையும், மாணவி நிதிலா 454 மதிப்பெண்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

450 மதிப்பெண்களுக்கு மேல் 18 மாணவர்களும், 350-மதிபெண்களுக்கு மேல் 22 மாணவர்களும் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சாதனை படைத்த மாணவ-மாணவிகளை விவேகானந்தா கல்வி குழுமத்தின் தாளாளரும் எம்.பி.யுமான செல்வகணபதி, முதன்மை முதல்வர் பத்மா, விவேகானந்தா சி.பி.எஸ்.இ பள்ளி துணை முதல்வர் மீனாட்சி ஆகியோர் பாராட்டினார்கள்.

Tags:    

Similar News