ஷாட்ஸ்
மதுரையில் 2-வது நாளாக ஆய்வு: 5 மாவட்ட கலெக்டர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, மகளிர் திட்டம், வேளாண்மை, உழவர் நலத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, சிறு துறைமுகத்துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கலெக்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.