ஷாட்ஸ்
வங்காளதேசம் அருகே கரையைக் கடந்தது ஹாமூன் புயல்
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இது நேற்று அதிதீவிர புயலாக மாறி பின் மிகத்தீவிர புயலாக மாறியது. தீவிர புயலாக இருந்த ஹாமூன் வலுவிழந்து வங்கதேசம் அருகே இன்று கரையைக் கடந்தது. அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.