ஷாட்ஸ்

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் தேவாரம், திருவாசகம் பாட அனுமதி

Published On 2022-06-22 02:49 IST   |   Update On 2022-06-22 02:49:00 IST

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மேடையின் மீது நின்று தேவாரம், திருவாசகம் பாட இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்தது. ஒவ்வொரு கால பூஜை முடிந்த பிறகு தேவார, திருவாசக திருமுறைகளை ஓதி வழிபடலாம். இதற்கு கட்டணம் வசூலிக்க கூடாது. பிற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமலும், கோவிலின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் பாடவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

Similar News