ஷாட்ஸ்
கூடலூரில் இன்று மாலை பாதயாத்திரை- பழங்குடியின மக்களை சந்திக்கும் ராகுல்காந்தி
கேரள மாநிலம் நிலம்பூர், வழிக்கடவு வழியாக இன்று மாலை 3 மணியளவில் நீலகிரி மாவட்டம் கூடலூர் ஆமைகுளத்திற்கு ராகுல்காந்தி வருகிறார். அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுகர், தோடர் இன மக்களை ராகுல்காந்தி சந்தித்து பேசுகிறார்.