ஷாட்ஸ்
திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது- 8 லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை அருணாசேலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையாருக்கு அரோகரோ கோஷம் எழுப்பி மகா தீபத்தை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதைதொடர்ந்து, அண்ணாமலையார் கோயில் நுழைவாயிலில் தீபம் ஏற்றப்பட்டது.