ஷாட்ஸ்
துணைவேந்தர் விவகாரம்.. தமிழக அரசுக்கு அதிகாரமில்லை.. ஆளுநர் ஆர்.என். ரவி
சென்னை பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேர்வுக் குழுவை அமைக்க தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். மேலும் தனது அனுமதியின்றி தன்னிச்சையாக அரசிதழில் தேடுதல் குழு அமைக்கப்பட்டதாக ஆளுநர் குற்றம்சாட்டி உள்ளார்.