தொழில்நுட்பம்

புதிய பிராசஸர்களுடன் மேம்படுத்தப்பட்ட ரேசர் பிளேடு கேமிங் லேப்டாப்

Published On 2017-02-19 05:17 IST   |   Update On 2017-02-19 05:17:00 IST
பிரபல வன்பொருள் பிரான்டான ரேசர், தனது கேமிங் லேப்டாப்களை மேம்படுத்தியுள்ளது. அதன் படி லேப்டாப்களுக்கு புதிய வகை பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா:

ரேசர் பிளேடு கேமிங் லேப்டாப்கள் மீண்டும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இம்முறையும் கடந்த ஆண்டை போன்றே மெல்லிய வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் ஸ்கைலேக் பிராசஸர்கள் வழங்கப்பட்ட நிலையில் இம்முறை கேபிலேக் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.  

ரேசர் பிளேடு லேப்டாப் சிறப்பம்சங்களை பொருத்த வரை 14.0 இன்ச் 1920x1800 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 2.8 ஜிகாஹெர்ட்ஸ் கோர் i7-7700 கேபிலேக் சிப்செட், 16ஜிபி ரேம், Nvidia GTX 1060 GPU மற்றும் 6ஜிபி VRAM மற்றும் 256ஜிபி, 512 ஜிபி மற்றும் 1000 ஜிபி ஸ்டோரேஜ் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. 

ரேசர் பிளேடு புதிய அப்டேட்களுக்கு ரூ.6,700 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை யுஎஸ்பி டைப்-சி போர்ட் தன்டர்போல்ட் 3 மற்றும் மூன்று யுஎஸ்பி 3.0 போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் HDMI 2.0 ஆடியோ மற்றும் வீடியோ அவுட்புட், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டுள்ளது.  

மேலும் 4K UHD 3840x2160 ரெசல்யூஷன் கொண்ட டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே. அமெரிக்காவில் ரேசர் பிளேடு விற்பனை பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News