தொழில்நுட்பம்
வால்வோ எக்ஸ்.சி.40

வால்வோ எக்ஸ்.சி.40 வெளியீட்டு விவரம்

Published On 2019-11-15 15:12 IST   |   Update On 2019-11-15 15:27:00 IST
வால்வோ நிறுவனத்தின் எக்ஸ்.சி.40 பெட்ரோல் மாடல் காரின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



ஸ்வீடன் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான வால்வோ எக்ஸ்.சி.40 மாடலின் பெட்ரோல் வேரியண்ட்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. வெளியீட்டிற்கு முன் இதற்கான முன்பதிவுகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வால்வோ நிறுவனத்தின் எக்ஸ்.சி.40 மாடல் டி4 2.0 டீசல் என்ஜினுடன் கிடைக்கிறது. இந்த என்ஜின் 190 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. டீசல் மாடல் தற்சமயம் விற்றுத் தீர்ந்துவிட்டது. இதன் விற்பனை அடுத்த ஆண்டு வாக்கில் துவங்கலாம்.



விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் எக்ஸ்.சி.40 மாடல் டி4 வேரியணட்டில் கிடைக்கும் என்றும் இதில் 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 190 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும். இத்துடன் 8-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

வால்வோ எக்ஸ்.சி.40 மாடலில் பேடிள்-ஷிஃப்டர்கள், அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் பார்க்கிங், ஹீட்டெட் சீட், வையர்லெஸ் போன் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.

இந்தியாவில் இந்த எஸ்.யு.வி. மாடலின் விலை ரூ. 34 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம். அறிமுகமானதும் எக்ஸ்.சி.40 பெட்ரோல் மாடல் பி.எம்.டபுள்யூ. எக்ஸ்1, மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.ஏ., ஆடி கியூ3 மற்றும் மினி கண்ட்ரிமேன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Similar News