இயர்பட்ஸ்-இல் இப்படியொரு சென்சாரா? அதகளப்படுத்தும் கூகுள்
- புதுவித அகௌஸ்டிக் சென்சிங் சிஸ்டம் எனும் தொழில்நுட்பத்தை வழங்குகிறது.
- கூகுள் உருவாக்கும் புதிய ANC ரக இயர்பட்ஸ்-இல் மைக்ரோபோன் வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஸ்மார்ட் ரிங் போன்ற சாதனங்களில் ஹார்ட் ரேட் சென்சார் வழங்குவது மிகவும் சாதாரண விஷயமாகி விட்டது. பயனர்களுக்கு மிகமுக்கியமான அம்சமாக ஹார்ட் ரேட் டிராக்கிங் தற்போது பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவன சாதனங்களில் உள்ள ஹார்ட் ரேட் சென்சார் பலரின் உயரை எச்சரிக்கை கொடுத்து காப்பாற்றிய சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.
எனினும், இவற்றை பயன்படுத்துவோர் எண்ணிக்கை பெரும்பான்மையாக மாறவில்லை. இதனை கருத்தில் கொண்டு உடல்நல அம்சங்களை அணியக்கூடிய சாதனங்களில் வழங்குவது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறி இருக்கிறது. அந்த வரிசையில், கூகுள் நிறுவனம் தனது இயர்பட்களில் புதுவித அகௌஸ்டிக் சென்சிங் சிஸ்டம் எனும் தொழில்நுட்பத்தை வழங்க இருக்கிறது.
இது தொடர்பாக கூகுள் நிறுவனம் ஆடியோ-பிலடிஸ்மோ-கிராஃபி (ஏ.பி.ஜி.) துறையில் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறது. இந்த வழிமுறையில் ஒலி அலைகளை கொண்டு இரத்த சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களை கணக்கிட முடியும். கூகுள் உருவாக்கும் புதிய ANC ரக இயர்பட்ஸ்-இல் மைக்ரோபோன் வழங்கப்படுகிறது. இவை காற்றினுள் ஏற்படும் ஏராளமான பயோ-சிக்னல்களை பதிவு செய்யும்.
இவ்வாறு பதிவு செய்யப்படும் சிக்னல்களை கொண்டு ஹார்ட் ரேட் ரீடிங் மற்றும் ஹார்ட் ரேட் வேரியபிலிட்டி என இருவித இதய செயல்பாட்டை டிராக் செய்ய முடியும். இந்த அம்சம் பயனர்கள் இயர்பட்ஸ்-இல் இசையை அனுபவிக்கும் போதும் சிறப்பாக இயங்கும். தற்போது இருக்கும் ஹார்ட் ரேட் சென்சார்களுடன் ஒப்பிடும் போது, இந்த தொழில்நுட்பத்தில் சரும டோன்களால் எவ்வித இடர்பாடும் ஏற்படாது.