null
இணையத்தில் லீக் ஆன ஐகூ 11 ப்ரோ அம்சங்கள்
- ஐகூ நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
- புதிய ஐகூ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
ஐகூ நிறுவனம் தனது ஐகூ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் ஐகூ 11 மற்றும் ஐகூ 11 ப்ரோ என இரு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. ஐகூ 11 சீரிஸ் அம்சங்கள் பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. எனினும், புது ஸ்மார்ட்போன் விவரங்கள் தற்போது இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
புதிய ஐகூ 11 ப்ரோ அம்சங்கள் மட்டுமின்றி இதன் இந்திய வெளியீடு பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி இந்திய சந்தையில் புதிய ஐகூ 11 ப்ரோ ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. வரும் வாரங்களில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
அம்சங்களை பொருத்தவரை ஐகூ 11 ப்ரோ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் விவோ நிறுவனத்தின் புதிய வி2 சிப், 6.78 இன்ச் E6 AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், பிஎம்டபிள்யூ M மோட்டார்ஸ்போர்ட் சார்ந்த டிசைன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP, 48MP மற்றும் 64MP கேமரா, 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4700 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.