புதிய கேஜெட்டுகள்

40 மணி நேர பிளேபேக்.. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி - ரூ. 799-க்கு அறிமுகமான இயர்பட்ஸ்

Published On 2024-02-06 11:05 GMT   |   Update On 2024-02-06 11:05 GMT
  • வெளிப்புற சத்தத்தை தடுத்து, சிறப்பான தகவல் பரிமாற்றத்திற்கு வழி செய்கிறது.
  • பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 40 மணி நேரத்திற்கு பிளேடைம் கிடைக்கும்.

ஐடெல் நிறுவனம் தனது முற்றிலும் புதிய குறைந்த விலை இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ஐடெல் S9 ப்ரோ என அழைக்கப்படும் புதிய இயர்பட்ஸ் அந்நிறுவனத்தின் ரோர் 75 ஓபன் இயர்பட்ஸ் வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஐடெல் S9 ப்ரோ மாடலில் இன்-இயர் டிசைன் உள்ளது. இதில் 10mm பாஸ் பூஸ்ட் டிரைவர்கள், என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் அழைப்புகளின் போது வெளிப்புற சத்தத்தை தடுத்து, சிறப்பான தகவல் பரிமாற்றத்திற்கு வழி செய்கிறது.

இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 40 மணி நேரத்திற்கு பிளேடைம் கிடைக்கும். இத்துடன் ப்ளூடூத் 5.3, 45ms அல்ட்ரா லோ லேடன்சி மோட், டச் கண்ட்ரோல்கள், டைப் சி போர்ட் போன்ற வசதிகள் உள்ளன.

 


ஐடெல் S9 ப்ரோ அம்சங்கள்:

10mm பாஸ் பூஸ்ட் டிரைவர்கள்

டூயல் மைக் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன்

45ms லோ லேடன்சி கேமிங் மோட்

ப்ளூடூத் 5.3

இயர்பட் (40 எம்.ஏ.ஹெச். பேட்டரி)

கேஸ் (400 எம்.ஏ.ஹெச். பேட்டரி)

40 மணி நேர பிளேடைம்

ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி 10 நிமிட சார்ஜில் 100 நிமிடங்கள் பிளேபேக்

டைப் சி சார்ஜிங்

IOX5 ஸ்பிலாஷ் ப்ரூஃப் வசதி

இன்-இயர் டிடெக்ஷன்

இந்திய சந்தையில் புதிய ஐடெல் S9 ப்ரோ இயர்பட்ஸ் டார்க் புளூ மற்றும் நெபுளா பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 799 ஆகும். விற்பனை நாடு முழுக்க சில்லறை விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

Tags:    

Similar News