புதிய கேஜெட்டுகள்

சத்தமின்றி உருவாகும் புதிய ஏர்பாட்ஸ் மேக்ஸ் - வெளியீடு எப்போ தெரியுமா?

Published On 2023-10-26 13:48 IST   |   Update On 2023-10-26 13:48:00 IST
  • ஆடியோ தரத்தை மேம்படுத்த திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • ஏர்பாட்ஸ் மேக்ஸ் என்ற பெயரில் புதிய இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் தனது ஏர்பாட்ஸ் சீரிஸ் மாடல்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொள்ளும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஏர்பாட்ஸ் டிசைன், கேஸ் உள்ளிட்டவைகளை அப்டேட் செய்து ஆடியோ தரத்தை மேம்படுத்த திட்டமிடுவதாக ஆப்பிள் வல்லுனர் மார்க் குர்மேன் தெரிவித்துள்ளார்.

இத்துடன் 2024 ஆண்டு ஏர்பாட்ஸ் மேக்ஸ் என்ற பெயரில் புதிய இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்படுவதாகவும், 2025 ஆண்டு ஏர்பாட்ஸ் ப்ரோ வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். புதிய ஏர்பாட்ஸ் மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல்கள் முற்றிலும் புதிய டிசைன் மற்றும் மேம்பட்ட ஆடியோ கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

 

புதிய ஏர்பாட்ஸ் அறிமுகமாகும் போது, தற்போது விற்பனை செய்யப்படும் இரண்டு மற்றும் மூன்றாம் தலைமுறை மாடல்களின் விற்பனை நிறுத்தப்பட்டு விடும் என்று தெரிகிறது. இதற்கு மாற்றாக இரண்டு நான்காம் தலைமுறை ஏர்பாட்ஸ் மாடல்கள் வெவ்வேறு விலை பிரிவுகளில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

ஏர்பாட்ஸ் மேக்ஸ் மாடலில் யு.எஸ்.பி. சி வகை சார்ஜிங் மற்றும் புதிய நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. 2025 ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் ரிடைசன் செய்யப்பட்டு அதிவேக சிப்செட் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News