ரூ. 799 விலையில் விலையில் புதிய இயர்பட்ஸ் அறிமுகம் செய்த நாய்ஸ்
- நாய்ஸ் பட்ஸ் ஏரோ மாடல் பிரத்யேக கேமிங் மோட் மற்றும் 50ms லோ லேடன்சி வசதி உள்ளது.
- இந்த இயர்பட்ஸ் சார்கோல் பிளாக் மற்றும் ஸ்னோ வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நாய்ஸ் பட்ஸ் ஏரோ பெயரில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. மெல்லிய மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கும் நாய்ஸ் பட்ஸ் ஏரோ மாடலில் க்ரோம் அக்சென்ட்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த இயர்பட்ஸ் அழகிய தோற்றம் மற்றும் அசத்தலான ஆடியோ அனுபவம் வழங்குகிறது.
இசை ப்ரியர்கள், கேமர்கள் மற்றும் பலருக்கும் பயனளிக்கும் அம்சங்களை இந்த இயர்பட்ஸ் கொண்டிருக்கிறது. நாய்ஸ் பட்ஸ் ஏரோ மாடலில் உள்ள பிரத்யேக கேமிங் மோட் மற்றும் 50ms லோ லேடன்சி வசதியை வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ்-ஐ முழு சார்ஜ் செய்தால் 45 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.
இத்துடன் 13mm டிரைவர்கள், ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இதில் உள்ள ஹைப்பர்சின்க் தொழில்நுட்பம் இயர்பட்ஸ்-ஐ வேகமாக ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொள்ளும் வசதியை வழங்குகிறது. இத்துடன் IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் நாய்ஸ் பட்ஸ் ஏரோ மாடலின் விலை ரூ. 799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் சார்கோல் பிளாக் மற்றும் ஸ்னோ வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஜூலை 1-ம் தேதி துவங்குகிறது.