நீண்ட நேர பேக்கப், ANC வசதியுடன் ஒன்பிளஸ் பட்ஸ் 3 அறிமுகம்
- ஒன்பிளஸ் பட்ஸ் 3 மாடலில் ANC வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
- புதிய பட்ஸ் 3 மாடலில் IP55 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி உள்ளது.
ஒன்பிளஸ் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் பட்ஸ் 3 சீரிஸ் இயர்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை இயர்பட்ஸ் ஆகும்.
கிளாஸி ஃபினிஷ் டிசைன் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் பட்ஸ் 3 இயர்பட்ஸ் 10.4mm வூஃபர், 6mm டுவீட்டர் கொண்டிருக்கிறது. இதன் மூலம் பட்ஸ் 3 அல்ட்ரா வைடு 15Hz முதல் 40KHz வரையிலான ஃபிரீக்வன்சியை வழங்குகிறது. இத்துடன் 49db வரையிலான நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் இதை கொண்டு இரு நிலைகளில் ANC வசதியை பயன்படுத்தலாம்.
இத்துடன் LHDC 5.0 ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட், டச் கண்ட்ரோல்கள், IP55 சான்று பெற்றிருக்கிறது. இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 44 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
ஒன்பிளஸ் பட்ஸ் 3 அம்சங்கள்:
10.4mm பேஸ் டிரைவர், 6mm டுவீட்டர்
AAC, SBC கோடெக்
LHDC 5.0, ஹை-ரெஸ் ஆடியோ
அதிகபட்சம் 1Mbps வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் ரேட்
3 மைக்குகள்
டச் கண்ட்ரோல் வசதி
94ms லோ-லேடன்சி
3 நிலைகளில் ANC வசதி
3D சரவுன்ட் ஸ்பேஸ், டைனமிக் பேஸ் தொழில்நுட்பம்
யு.எஸ்.பி. டைப் சி சப்போர்ட்
பட்ஸ்- 58 எம்.ஏ.ஹெச். பேட்டரி, கேஸ்- 520 எம்.ஏ.ஹெச். பேட்டரி
ANC-யுடன் அதிபட்சம் 28 மணி நேர பேக்கப்
ANC பயன்படுத்தாமல் அதிகபட்சம் 44 மணி நேர பேக்கப்
ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி- 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 7 மணி நேர பேக்கப்
ஒன்பிளஸ் பட்ஸ் 3 இயர்பட்ஸ் மாடல் மெட்டாலிக் கிரே மற்றும் ஸ்பிலென்டிட் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 5 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான், ஒன்பிளஸ் ஆன்லைன் மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர், தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் ஸ்டோர்களில் பிப்ரவரி 6-ம் தேதி துவங்குகிறது.