புதிய கேஜெட்டுகள்

ஒன்பிளஸ் ஓபன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

Published On 2023-10-13 11:55 GMT   |   Update On 2023-10-13 11:55 GMT
  • மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தது.
  • ஓபன் என்ற வார்த்தை புதிய மடிக்கக்கூடிய வடிவமைப்பை உணர்த்துகிறது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் ஓபன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அக்டோபர் 19-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான அறிமுக நிகழ்வு மும்பையில் நடைபெற இருக்கிறது. முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், தற்போது இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.

புதிய ஸ்மார்ட்போனின் பெயரில் ஓபன் என்ற வார்த்தை புதிய மடிக்கக்கூடிய வடிவமைப்பை உணர்த்துவதோடு, ஒன்பிளஸ் நிறுவனம் புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் கொண்டிருக்கும் விருப்பத்தை குறிக்கும் வகையில் அமைந்து இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

 

இதற்காக ஒன்பிளஸ் சூட்டி இருக்கும், "Open for Everything" என்ற வாக்கியத்தின் மூலம் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய சாத்தியக்கூறுகள் அனைத்தையும் முயற்சிக்க இருப்பதாக தெரிவித்து உள்ளது.

ஒன்பிளஸ் ஓபன் மாடலில் 31 பாகங்கள் குறைவாக இருப்பதால், இதன் எடை குறைவாக இருக்கும் என்றும் இது ஒப்போ ஃபைண்ட் N2 மாடலை விட 37 சதவீம் சிறியதாக இருக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனர் ஏற்கனவே தெரிவித்து விட்டார். மேலும் ஒப்போ ஃபைண்ட் N3 மற்றும் ஒன்பிளஸ் ஓபன் மாடல்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான டிசைன் கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

இந்த ஸ்மார்ட்போனில் 48MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 64MP டெலிஃபோட்டோ கேமரா, ஹேசில்பிலாட் பிராண்டிங் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 7.8 இன்ச் மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளே, 6.31 இன்ச் வெளிப்புற OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 16 ஜி.பி. வரையிலான ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News