புதிய கேஜெட்டுகள்

விரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் 12 5ஜி

Published On 2022-11-05 11:42 IST   |   Update On 2022-11-05 11:42:00 IST
  • சியோமி நிறுவனத்தின் புதிய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்றுள்ளன.
  • முன்னதாக ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்கள் சீன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 சீரிசில் ஐந்து வெவ்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை கடந்த வாரம் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றில் சில மாடல்கள் இந்திய சந்தையில் ரிபிராண்டு செய்யப்பட இருக்கின்றன. இது குறித்து ஏற்கனவே வெளியான தகவல்களில் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல் சியோமி 12i ஹைப்பர்சார்ஜ் பெயரில் இந்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என்றும் ரெட்மி நோட் 12 5ஜி மாடல் போக்கோ பிராண்டிங்கில் இந்தியா வரும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், ரெட்மி நோட் 12 வென்னிலா மாடல் பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 22111317PI எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போனின் இந்திய வேரியண்ட் மாடல் நம்பரில் வேறுபாடு ஏற்படலாம் என்ற போதிலும், இது சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 12 5 ஜி மாடல் தான் என கூறப்படுகிறது. மேலும் இந்த மாடல் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் தெரிகிறது.

அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 12 5ஜி மாடலில் 6.67 இன்ச் சாம்சங் OLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 48MP பிரைமரி கேமரா, 2MP கேமரா, 8MP செல்பி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி,33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.

சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 12 5ஜி மாடல் புளூ, வைட் மற்றும் பிளாக் என மூன்று விதமான நிறங்கள் மற்றும் நான்கு விதமான மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை RMB1199 இந்திய மதிப்பில் ரூ. 13 ஆயிரத்து 640 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News