null
67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கவர் ஸ்கிரீன் கொண்ட சியோமி ப்ளிப் போன் - லீக் ஆன புகைப்படம்
- சியோமி மிக்ஸ் ப்ளிப் போனின் புகைப்படங்கள் லீக்.
- ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படலாம்.
சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ப்ளிப் போன் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாவது வாடிக்கையான விஷயம் தான். அந்த வரிசையில் சியோமி மிக்ஸ் ப்ளிப் போனின் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது.
இதில் ஸ்மார்ட்போனின் டிசைன் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. மேலும், இதே ஸ்மார்ட்போன் 3C சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சீன வலைதளமான வெய்போவில் வெளியாகி இருக்கும் புகைப்படங்களின் படி சியோமி மிக்ஸ் ப்ளிப் போனின் பேக் பேனலில் கவர் ஸ்கிரீன் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் இரட்டை கேமரா மாட்யுல், இரு எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்படுகிறது. மேலும், லெக்யா லோகோ இடம்பெற்று இருக்கிறது.
புதிய மிக்ஸ் ப்ளிப் போன் கோல்டன் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. இதன் கீழ்புறத்தில் சியோமி லோகோ இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2405CPX3DC மாடல் நம்பர் கொண்டுள்ளது. இதில் அதிகபட்சம் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சியோமி மிக்ஸ் ப்ளிப் போனில் 1.5K ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, ஆம்னிவிஷன் OV60A 1/2.8 இன்ச் சென்சார், 2x ஆப்டிக்கல் ஜூம் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
இந்த மாடலில் 32MP செல்ஃபி கேமரா, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் பற்றி சியோமி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.