முன்னணி ஸ்மார்ட்வாட்ச் பிராண்டு.. முதலிடத்தை இழந்த ஆப்பிள்
- இந்த நிலை மாறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- அதிக அணியக்கூடிய சாதனங்களை விற்பனை செய்துள்ளது.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஆப்பிள். ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், கணினி என பல பிரிவுகளில் மின்சாதனங்களை விற்பனை செய்து முன்னணி இடத்தில் உள்ளது. ஸ்மார்ட்வாட்ச் பிரான்டுகள் பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் உலகளவில் முதலிடத்தில் இருந்து வந்தது. எனினும், தற்போது இந்த நிலை மாறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்மார்ட்வாட்ச் சார்ந்த அம்சங்கள் மற்றும் சேவைகளை சிறந்து விளங்குவதில் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் தற்போது இந்த பிரிவில் முதலிடத்தை பறிக்கொடுத்துள்ளது. அந்த வகையில், உலகின் முன்னணி ஸ்மார்ட்வாட்ச் பிராண்டு என்ற பெருமையை ஹூவாய் நிறுவனம் பெற்றிருக்கிறது. சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள காலாண்டு அறிக்கையில், இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
உலகளவில் அணியக்கூடிய சாதனங்கள் காலாண்டு அடிப்படையில் எந்த அளவு விற்பனையாகி உள்ளன என்பதை விவரிக்கும் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையின் படி 2024 ஆண்டின் முதல் மற்றும் மூன்றாவது காலாண்டுகளில் ஹூவாய் நிறுவனம் ஆப்பிளை விட அதிக அணியக்கூடிய சாதனங்களை விற்பனை செய்துள்ளது.
இதன் மூலம் ஹூவாய் நிறுவனத்தின் சந்தை பங்குகள் 16.9 சதவீதமாக (23.6 மில்லியன் யூனிட்கள்) அதிகரித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் இதே காலக்கட்டத்தில் 16.2 சதவீத பங்குகளுடன் (22.5 மில்லியன் யூனிட்கள் ) இரண்டாவது இடத்தில் உள்ளது.