அறிந்து கொள்ளுங்கள்
ஒருவழியாக 5ஜி சேவைகளை துவங்கிய வோடபோன் ஐடியா
- வர்த்தக முறையில் 5ஜி சேவையை வழங்க துவங்கியது.
- பிரீபெயிட், போஸ்ட்போயிட் பயனர்களுக்கு கிடைக்கிறது.
வோடபோன் ஐடியா நிறுவனம் நாட்டில் உரிமம் பெற்ற 17 சேவை வழங்கும் பகுதிகளில் 5ஜி சேவையை துவங்கியது. மிக சிறிய அளவில் சேவை வழங்கப்படுவதால், பல பயனர்களால் இதனை பயன்படுத்த முடியாது. இந்த சேவை அறிமுகத்தின் மூலம் வோடபோன் ஐடியா நிறுவனம் வர்த்தக முறையில் 5ஜி சேவையை வழங்க துவங்கியுள்ளது.
3.3 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸில் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 5ஜி சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த ஸ்பெக்ட்ரம் தற்போது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்போயிட் பயனர்களுக்கு கிடைக்கிறது. தமிழகத்தில் வோடபோன் ஐடியா 5ஜி சேவைகள் சென்னை, பெருங்குடி மற்றும் நெசப்பாக்கம் பகுதிகளில் கிடைக்கிறது.
வோடபோன் ஐடியாவின் 5ஜி பிரீபெயிட் பயனர்கள் ரூ. 475 ரீசார்ஜ் செய்து 5ஜி சேவையை பயன்படுத்த முடியும். போஸ்ட்பெயிட் பயனர்கள் ரூ. 1101 ரெட்-எக்ஸ் ரீசார்ஜில் 5ஜி சேவையை பயன்படுத்தலாம்.