முன்கூட்டியே வெளியாகும் ஆண்ட்ராய்டு 16 - லீக் ஆன முக்கிய தகவல்
- செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் வெளியிடப்படும்.
- பிக்சல் சாதனங்களுக்கும் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் அடுத்த மொபைல் ஓ.எஸ். ஆண்ட்ராய்டு 16 ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் அமெரிக்க நாட்டின் கோடை கால இறுதியிலோ அல்லது செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் வெளியிடப்படும்.
எனினும், அடுத்த ஆண்டு வெளியிடப்பட இருக்கும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் 2025 இரண்டாவது காலாண்டு வாக்கில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வெளியான தகவல்களில் ஜூன் 3 ஆம் தேதி ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் பிராஜக்ட்-க்கு (AOSP) மாற்றப்படும் என்றும் அதே நாள் தகுதி வாய்ந்த பிக்சல் சாதனங்களுக்கும் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு ஓஎஸ்-இன் கோர் இடம்பெற்று இருக்கும் சோர்ஸ் கோட் ஆர்கிவ் தான் AOSP ஆகும். இதில் தான் டெவலப்பர்கள் மற்றும் ஆண்ட்ராய்டு சார்ந்த கஸ்டம் ஓஎஸ் உருவாக்க முடியும். அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் புதிய பிக்சல் 10 சீரிஸ் மாடல்களில் வழங்கப்படும் ஆண்ட்ராயடு வெர்ஷன் எவ்வித பிழைகள் இன்றி பயனர்களுக்கு சீரான அனுபவத்தை வழங்குவதை உறுதிப்படுத்த கூகுள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
முன்கூட்டியே வெளியிடப்படுவது மட்டுமின்றி ஆண்ட்ராய்டு 16 வெர்ஷனில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படுகிறது. இவை பயனர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் விதத்தை அடியோடு மாற்றிவிடும்.