அறிந்து கொள்ளுங்கள்

ரீசார்ஜ் உடன் இன்சூரன்ஸ்.. ஏர்டெல் புது அறிவிப்பு

Published On 2024-10-24 10:22 GMT   |   Update On 2024-10-24 10:22 GMT
  • ஏர்டெல் நிறுவனம் பிரீபெயிட் சலுகைகளில் மாற்றம் செய்துள்ளது.
  • மூன்று ரீசார்ஜ்களில் இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது.

இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனம் ஏர்டெல். அவ்வப்போது பிரீபெயிட் சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது புதுவகை ரிசார்ஜ் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

ஏர்டெல் அறிவித்து இருக்கும் புதிய சலுகைகளுடன் விபத்து காப்பீடு வசதி வழங்கப்படுகிறது. இதற்காக ஏர்டெல் நிறுவனம் ஐசிஐசிஐ லாம்பார்டு உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம் ரூ. 239, ரூ. 399 மற்றும் ரூ. 999 சலுகைகளில் விபத்து காப்பீடு வசதி வழங்குகிறகு.

இதில் ரூ. 239 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இத்துடன் வழங்கப்படும் விபத்து காப்பீடு திட்டத்தில் உயிரிழப்புக்கு ரூ. 1 லட்சம், ரீசார்ஜ் செய்த 30 நாட்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள், காப்பீடுக்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

ரூ. 399 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இத்துடன் வழங்கப்படும் விபத்து காப்பீடு திட்டத்தில் உயிரிழப்புக்கு ரூ. 1 லட்சம், ரீசார்ஜ் செய்த 30 நாட்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள், காப்பீடுக்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

ரூ. 999 சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இத்துடன் வழங்கப்படும் விபத்து காப்பீடு திட்டத்தில் உயிரிழப்புக்கு ரூ. 1 லட்சம், ரீசார்ஜ் செய்த 30 நாட்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் சலுகையின் வேலிடிட்டி 80 நாட்கள், காப்பீடுக்கான வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் விபத்து காப்பீடு பயன்பெறுவது எப்படி?

விபத்து காப்பீடுகளில் பயன்பெற 48 மணி நேரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

இதற்கு முதலில் ஏர்டெல் வலைதளம் சென்று அக்கவுண்டில் சைன்-இன் செய்ய வேண்டும். அடுத்து இங்கிருந்தே விபத்து காப்பீடு தொடர்பான கோரிக்கையை எழுப்ப முடியும். ஒருவேளை அதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தை 121 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags:    

Similar News