அறிந்து கொள்ளுங்கள்

அப்டேட் ஆன ஐபேட் மினி: மேம்பட்ட பிராசஸர், புதிய நிறங்களில் அறிமுகம்

Published On 2024-10-16 05:28 GMT   |   Update On 2024-10-16 05:28 GMT
  • இந்த மாடலில் 8.3 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
  • புதிய ஐபேட் மினி மாடல் 3 மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் மினி மாடலை அப்டேட் செய்துள்ளது. புதிய ஐபேட் மினி மாடலில் ஏ17 ப்ரோ சிப்செட், ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாடலில் 8.3 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஐபேட் மினி மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த டேப்லெட் மாடல் ஐபேட் ஓ.எஸ். 18 கொண்டிருக்கிறது. இத்துடன் 12MP பிரைமரி கேமரா, ட்ரூ டோன் ஃபிளாஷ், 12MP அல்ட்ரா வைடு செல்பி கேமரா, ரெட்டினா ஃபிளாஷ், டூயல் மைக்ரோபோன்கள், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

 


டச் ஐடி சென்சார் கொண்டிருக்கும் புதிய ஐபேட் மினி மாடலில் கனெக்டிவிட்டிக்கு 5ஜி, ஜிகாபிட்-கிளாஸ் எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி 3 வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 19.3 வாட் பேட்டரி வங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஐபேட் மினி மாடல் ஸ்டார்லைட், ஸ்பேஸ் கிரே, புளூ மற்றும் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 128 ஜிபி விலை ரூ. 49 ஆயிரத்து 900 என்றும் 128 ஜிபி வைபை + செல்லுலார் மாடல் விலை ரூ. 64 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதன் 256 ஜிபி மெமரி மாடல் விலை 59 ஆயிரத்து 900 என்றும் வைபை + செல்லுலார் மாடல் விலை ரூ. 74 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 512 ஜிபி வைபை 79 ஆயிரத்து 900 என்றும் வைபை + செல்லுலார் மாடல் விலை ரூ. 94 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேம்பட்ட ஐபேட் மினி மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை அக்டோபர் 23 ஆம் தேதி துவங்குகிறது.

Tags:    

Similar News