null
ஆரஞ்சு நிறத்தில் புதிய பி.எஸ்.என்.எல். லோகோ வெளியீடு
- கூடுதல் கட்டணமும் இன்றி அதிவேக இணைய வசதி.
- தனியார் 5ஜி நெட்வொர்க் சேவையை வழங்க உள்ளன.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் முற்றிலும் புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டது. புதிய லோகோவுடன் ஏழு புது சேவைகள் பி.எஸ்.என்.எல்.-இல் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய லோகோவில் "கனெக்டிங் இந்தியா" நீக்கப்பட்டு "கனெக்டிங் பாரத்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டதோடு ஸ்பேம்-இல்லா நெட்வொர்க், தேசிய அளவில் வைபை ரோமிங் சேவை, பி.எஸ்.என்.எல். ஹாட்ஸ்பாட் மூலம் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி அதிவேக இணைய வசதி வழங்கப்படுகிறது.
இத்துடன் ஃபைபர் சார்ந்த இன்ட்ராநெட் டிவி சேவை வழங்கப்படுகிறது. இதில் 500 நேரலை டிவி சேனல்கள், FTTH பயனர்களுக்கு பே டிவி ஆப்ஷன் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது. மேலும் டிவி ஸ்டிரீமிங் FTTH டேட்டாவில் கழிக்கப்படாது.
இதுதவிர சிம் கியோஸ்குகளையும் பி.எஸ்.என்.எல். அறிமுகப்படுத்துகிறது. இதை கொண்டு பயனர்கள் எளிதில் சிம் வாங்குவது, போர்ட் செய்வது தொடர்பான சேவைகளை பயன்படுத்த முடியும். இதுதவிர சி-டி.ஏ.சி. மற்றும் பி.எஸ்.என்.எல். இணைந்து தனியார் 5ஜி நெட்வொர்க் சேவையை வழங்க உள்ளன. இதனை மைனிங்கிற்காக பயன்படுத்தலாம்.
இந்த நெட்வொர்க் மேம்பட்ட ஏ.ஐ., ஐ.ஓ.டி. செயலிகளை சப்போர்ட் செய்யும். இறுதியில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் டி2டி கனெக்டிவிட்டி சொல்யூஷன் வழங்கப்படுகிறது. இது செயற்கைக்கோள் மற்றும் டெரஸ்ட்ரியல் மொபைல் நெட்வொர்க்குகளை ஒருங்கிணைக்கிறது.