லேசாக கை பட்டதும் வெடித்து சிதறிய ஐபோன் - ஆப்பிள் கூறியது என்ன?
- வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை தொடர்பு கொண்டுள்ளார்.
- உணர்வதற்குள் அவரது கையில் தீ காயங்கள் ஏற்பட்டது.
சீனாவில் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவை அடுத்த சான்சியில் பெண் ஒருவர் பயன்படுத்தி வந்த ஐபோன் மாடல் அவர் உறங்கிக் கொண்டு இருந்த போது வெடித்தது. இதனால் அவருக்கு தீவிர காயங்கள் ஏற்பட்டது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஆப்பிள் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது ஆப்பிள் நிறுவனம் இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்து இருக்கிறது. இந்த சம்பவத்தின் போது உறக்கத்தில் இருந்த பெண்ணின் கை தவறுதலாக ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலின் மீது பட்டது. உடனே ஐபோன் மாடல் வெடித்தது. இதனை சம்பந்தப்பட்ட பெண் உணர்வதற்குள் அவரது கையில் தீ காயங்கள் ஏற்பட்டது.
இதில் பெண்ணுக்கு தீவிர காயங்கள் ஏற்பட்டதோடு, ஐபோன் மாடல் முழுமையாக சேதமடைந்துள்ளது. இதுதவிர சம்பவம் நடந்த அறையின் சுவர்களில் கரும்புகையால் ஏற்பட்ட சுவடு மற்றும் மெத்தை தீயில் எரிந்துள்ளது. இதில் வெடித்து சிதறிய ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலை அந்த பெண் கடந்த 2022 ஆம் ஆண்டு வாங்கியுள்ளார்.
இது குறித்த முதற்கட்ட விசாரணையில் பேட்டரி இயக்கத்தில் ஏற்பட்ட குறைபாடு காரணமாகவே ஐபோன் வெடித்து இருக்கும் என்று தெரியவந்துள்ளது. தனது ஐபோன் ஏன் வெடித்தது என்ற காரணத்தை அறிந்து கொள்ளும், தனக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் வீட்டில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு பெற முடியும் என்று பாதிக்கப்பட்ட பெண் நம்பிக்கை கொண்டுள்ளார்.