பூடான் நாட்டில் பயன்பாட்டுக்கு வந்த எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' இணைய சேவை!..
- இந்தியாவிலும் இந்த வருட இறுதிக்குள் ஸ்டார்லிங்க் சேவைகளை அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.
- 25 Mbps முதல் 110 Mbps வரை பதிவிறக்க வேகம் கிடைக்கும்.
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் மூலம் இணையதள வசதியை வழங்கி வருகிறது.
பல்வேறு நாடுகளில் ஸ்டார்லிங்க் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இந்த வருட இறுதிக்குள் ஸ்டார்லிங்க் சேவைகளை அறிமுகப்டுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்தியாவின் பாதுகாப்பு விதிமுறைகளை ஏற்பதில் ஸ்பேஸ் எக்ஸ் தாமதிப்பதால் ஸ்டார்லிங்க் சேவைகான ஒப்புதலில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்டை நாடான பூடானில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
25 Mbps முதல் 110 Mbps வரை பதிவிறக்க வேகத்தையும், 5 Mbps முதல் 10 Mbps வரை பதிவேற்ற வேகத்தையும் வழங்கும் அன்லிமிடெட் டேட்டாவை உள்ளடக்கிய மாதாந்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்து.
இதற்கான கட்டணமாக இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.4,167 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.