இந்தியா

SWARAIL: எல்லாம் ஒரே இடத்தில்.. SUPER செயலியை அறிமுகப்படுத்தும் ரெயில்வே

Published On 2025-02-02 12:02 IST   |   Update On 2025-02-02 12:02:00 IST
  • கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
  • பல சேவைகளை ஒரே இடத்தில இச்செயலி வழங்கவுள்ளது.

இந்திய ரெயில்வே 'ஸ்வாரெயில்' [SwaRail] என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. டிக்கெட் முன்பதிவு, உணவு ஆர்டர் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் கிடக்கும் வண்ணம் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய ரயில்வே தகவல் அமைப்பு (CRIS) உருவாக்கிய இந்த செயலி தற்போது பீட்டா சோதனையில் உள்ளது. இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். விரைவில் முறையாக செயலி மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

 

ஆன்லைனில் முன்பதிவில்லா டிக்கெட் புக்கிங் (UTS), ரெயில் டிக்கெட் புக்கிங், பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை பெறுவது, சீசன் பாஸ்களை நிர்வகிப்பது, PNR ஸ்டேட்டஸ் செக்கிங், இருக்கை கிடைப்பதை சரிபார்ப்பது, ஐஆர்சிடிசி கேட்டரிங் உணவு ஆர்டர், ரெயில்வே அட்டவணை விசாரணைகள், ரெயில் ரன்னிங் ஸ்டேட்டஸ், ரெயில் தேடல், பெட்டிகள் அமைப்பு, பயணச்சீட்டு, பார்சல் மற்றும் சரக்குக் கண்காணிப்பு, குறைகளைத் தீர்ப்பதற்கான ரெயில் மடாட் சேவை உள்ளிட்ட பல சேவைகளை ஒரே இடத்தில இச்செயலி வழங்கவுள்ளது.

 

இதனால் இதற்கென ஏற்கனேவே தனித்தனியே இருக்கும் செயலிகளை போனில் வைத்திருக்க வேண்டிய அவசியம் குறைவதால் போனில் இடம் மிச்சமாகும். ஏஐ தொழில்நுட்பம் மூலம் இந்த சேவைகள் மேலும் ஸ்வாரெயில் செயலியில் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News