இந்தியா

கோப்புப் படம்

பைக் சாகசத்தால் பறிபோன 5 உயிர்கள்.. மகா கும்பமேளாவுக்கு சென்று திரும்பும் வழியில் நடந்த சோகம்

Published On 2025-02-02 12:34 IST   |   Update On 2025-02-02 12:35:00 IST
  • மூன்று பெண்கள் உட்பட 5 நேபாள நாட்டவர்கள் பலியானார்கள்.
  • விபத்துக்கு காரணமான இருசக்கர வாகன ஓட்டிகள் அங்கிருந்து தப்பியோடினர்.

உத்தரப் பிரதேசம் பிராயக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு காரில் திரும்பிய நேபாளத்தைச் சேர்ந்த 5 பேரின் உயிரை பைக் ஸ்டண்ட் பறித்துள்ளது.

நேற்று, பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில், நெடுஞ்சாலையில் 9 பேருடன் கார் வந்துகொடுந்தபோது சிலர் பைக்கர்கள்  ஸ்டண்ட் செய்துகொண்டிருந்தனர்.

இதனால் பைக் மீது இடிக்காமல் இருக்க காரை டிரைவர் திருப்பியுள்ளார். இதில் கார் தாறுமாறாக ஓடி தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.

இதில் மூன்று பெண்கள் உட்பட 5 நேபாள நாட்டவர்கள் பலியானார்கள். இறந்தவர்கள் அர்ச்சனா தாக்கூர், இந்து தேவி, மந்தர்னி தேவி, பால் கிருஷ்ண ஜா மற்றும் ஓட்டுநர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள நான்கு பேர் பலத்த காயமடைந்த நிலையில் பாட்னாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். விபத்துக்கு காரணமான இருசக்கர வாகன ஓட்டிகள் அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News