இந்தியா

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தெலுங்கானா முழுவதும் நாளை காங்கிரஸ் போராட்டம்

Published On 2025-02-02 11:35 IST   |   Update On 2025-02-02 11:35:00 IST
  • இன்று பி.ஆர்.எஸ் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலை அருகே போராட்டம் நடந்தது.
  • ஐதராபாத் முழுவதும் ஜீரோ பட்ஜெட் என பேனர்.

திருப்பதி:

மத்திய பட்ஜெட்டில் தெலுங்கானாவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பூஜ்ஜியம் என பி.ஆர்.எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து உள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்.பி.க்கள் பா.ஜ.க.வுக்கு 8 எம்.பி.க்களும் உள்ளனர்.

இவ்வளவு எம்.பிக்கள் இருந்தும் தெலுங்கானாவுக்கு நிதியை கொண்டு வர முற்றிலும் தோல்வியடைந்து உள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக கூறி இன்று பி.ஆர்.எஸ் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலை அருகே போராட்டம் நடந்தது. மேலும் பி. ஆர்.எஸ். கட்சி சார்பில் ஐதராபாத் முழுவதும் ஜீரோ பட்ஜெட் என வைக்கப்பட்டுள்ள பேனர் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் நாளை மாநிலம் முழுவதும் கிராமம் தோறும் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும். அப்போது தெலுங்கானாவுக்கு உரிய நிதியை ஒதுக்காத பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரிக்க மாநில காங்கிரஸ் தலைவர் மகேஷ் குமார் கவுட் காங்கிரஸ் கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Tags:    

Similar News