கைதி உடையணிந்து தூக்கில் தொங்குவது போல் நடித்த சிறுவர்கள்
- மற்றொரு நபர் இங்கிருந்து சிறுவர்களை வெளியேற்றுமாறு சத்தம் போட்டார்.
- வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயனர்கள் பலரும் பள்ளி நிர்வாகிகளின் செயலை விமர்சித்து பதிவிட்டனர்.
சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அதில், பள்ளி விழா ஒன்றில் சிறுவர்கள் 3 பேர் கைதிகள் போல உடையணிந்து உள்ளனர். அவர்கள் 3 பேரும் மேடை ஏறி தூக்கில் தொங்குவது போல் காட்சிகள் உள்ளது. அப்போது கீழே இருந்து ஒருவர் வேகமாக மேடைக்கு சென்று ஒரு சிறுவனை தூக்கினார். இதை பார்த்த மற்றொரு நபர் இங்கிருந்து சிறுவர்களை வெளியேற்றுமாறு சத்தம் போட்டார்.
பின்னர் மேடையில் இருந்த மற்ற சிறுவர்களையும் கீழே இறக்கினர். அவர்கள் முகத்தில் அணிந்திருந்த கருப்பு துணியையும் அகற்றினர். பள்ளியில் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் ஒரு பகுதியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
என்றாலும் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயனர்கள் பலரும் பள்ளி நிர்வாகிகளின் செயலை விமர்சித்து பதிவிட்டனர். ஒரு பயனர், இந்த பள்ளி ஆசிரியர்களிடம் மனித நேயம் குறைவாக இருந்திருக்க வேண்டும். இந்த வீடியோ வரம்புகளை மீறியதாக உள்ளது என பதிவிட்டார்.