இந்தியா
கொல்கத்தாவில் கடும் பனி மூட்டம்: 13 விமானங்கள் தாமதம்
- கொல்கத்தாவில் பனி மூட்டத்துடன் மோசமான வானிலை நிலவுகிறது.
- குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக சென்றன.
கொல்கத்தா:
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் கடுமையான பனி மூட்டத்துடன் மோசமான வானிலை நிலவுகிறது.
கொல்கத்தாவில் காலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் விமான சேவை பாதிப்பு அடைந்தது. குறிப்பிட்ட நேரங்களில் புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
மோசமான வானிலை நிலவுவதால் பயணிகள் பாதுகாப்பு காரணமாக விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பயணிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், விமான புறப்பாடு தாமதம் காரணமாக பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
ஏற்கனவே, ஜனவரி 23-ம் தேதி 72 விமானங்கள், 24-ம் தேதி 34 விமானங்கள், 25-ம் தேதி 53 விமானங்களின் சேவைகள் பாதிப்பு அடைந்தன.