இந்தியா

VIDEO: ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது தாக்குதல்.. தோல்வி விரக்தியில் வன்முறையில் ஈடுபடும் பாஜக - கெஜ்ரிவால்

Published On 2025-02-02 10:33 IST   |   Update On 2025-02-02 13:55:00 IST
  • கூட்டத்தில் புகுந்து அவரை சிலர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
  • டெல்லி தேர்தலில் பாஜக மோசமான தோல்வியடைந்து வருகிறது

டெல்லியில் வரும் புதன்கிழமை [பிப்ரவரி 5] சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆளும் ஆம் ஆத்மி, மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய உள்ள நிலையில் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏவும், டெல்லியின் ரிதாலா தொகுதியின் வேட்பாளருமான மொஹிந்தர் கோயல் மீது தாக்குதல் நடத்நியுள்ளது. கூட்டத்தில் புகுந்து அவரை சிலர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

இந்நிலையில் தேர்தல் தோல்வி பயத்தில் பாஜகவினர் இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுவதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், `டெல்லி தேர்தலில் பாஜக மோசமான தோல்வியடைந்து வருகிறது. தோல்வி விரக்தியில் இப்போது வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மகேந்திர கோயல் மீதான பாஜகவினரின் தாக்குதலைக் கடுமையாக கண்டிக்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

Tags:    

Similar News