இந்தியா

டெல்லி சட்டசபை தேர்தல்- பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரம்

Published On 2025-02-02 08:57 IST   |   Update On 2025-02-02 08:57:00 IST
  • தேர்தலில் மொத்தம் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
  • தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 8-ந்தேதி எண்ணப்படுகிறது.

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு வருகிற 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் மொத்தம் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 8-ந்தேதி எண்ணப்படுகிறது. இன்னும் தேர்தலுக்கு 3 நாட்களே உள்ளது. தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைய உள்ளது. இதற்கிடையே இந்த சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெல்லவே வாய்ப்புகள் அதிகம் என புதிய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டெல்லியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜ.க.வினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். 

Tags:    

Similar News