கும்பமேளா கூட்டநெரிசல்: காயமுற்றவர்களை மருத்துவமனையில் சந்தித்த முதல்வர் யோகி ஆதித்யநாத்
- யோகி ஆதித்யநாத் மருத்துவமனையில் சந்தித்து பேசினார்.
- சிறந்த சிகிச்சை அளிக்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமுவர்களை உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மருத்துவமனையில் சந்தித்து பேசினார்.
மேலும், மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் பேசிய அவர், அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு மருத்துவ ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 29-ம் தேதி அதிகாலை மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் பாதுகாப்பாக தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதை உறுதி செய்யுமாறு யோகி ஆதித்யநாத் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டுள்ளார்.
யோகி ஆதித்யநாத் வருகைக்கு முன், உத்தர பிரதேச தலைமைச் செயலாளரும், டி.ஜி.பி.யும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.