இந்தியா
ரஷியாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு
- 11 சதவீதம் அதிகமான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
- ஓராண்டுக்கு முன்பு இறக்குமதி செய்ததை விட 8 சதவீதம் அதிகம்.
உக்ரைன் போரைத் தொடர்ந்து, ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இருப்பினும், ரஷியாவிடம் இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது.
இருப்பினும், சமீபத்திய அமெரிக்காவின் புதிய பொருளாதார தடைகளால், இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது சரிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த ஜனவரி மாதத்தில், டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 11 சதவீதம் அதிகமான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது, ஓராண்டுக்கு முன்பு இறக்குமதி செய்ததை விட 8 சதவீதம் அதிகம்.
49 நாட்கள் கருணை காலத்தை பயன்படுத்தி, இந்தியா இறக்குமதியை அதிகரித்துள்ளது. அதுபோல், அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவு, ஜனவரி மாதத்தில் 4 மடங்கு உயர்ந்துள்ளது.