இந்தியா

ராஜினாமா செய்த 8 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர்

Published On 2025-02-01 20:23 IST   |   Update On 2025-02-01 20:23:00 IST
  • மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் ராஜினாமா.
  • தேர்தலுக்கு சில நாட்கள் உள்ள நிலையில் ராஜினாமா செய்துள்ளதால் ஆம் ஆத்மி அதிர்ச்சி.

புதுடெல்லி:

டெல்லி சட்டசபை தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் தேர்தலுக்கு 3 நாட்களே உள்ளது. தேர்தல் பிரசாரம் நாளையுடன் நிறைவடைய உள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி- பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து விலகினர். எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஆம் ஆத்மி கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்காததால் அதிருப்தியில் இருந்த நிலையில் பாவனா கவுர், ரோகித் மெஹ்ரவுலியா, கிரிஷ் சோனி, மதன் லால், ராஜேஷ் ரிஷி, பூபிந்திர் சிங் சூன், நரேஷ் யாதவ், பவன் ஷர்மா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய 8 எம்.எல்.ஏ.க்களும் இன்று பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Tags:    

Similar News