அறிந்து கொள்ளுங்கள்

ஒரே ரிசார்ஜ் 24 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி.. ஜியோ 2024 புத்தாண்டு சலுகை அறிவிப்பு..

Published On 2023-12-25 16:40 IST   |   Update On 2023-12-25 16:40:00 IST
  • ஜியோ புத்தாண்டு சலுகையில் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
  • இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2024 புத்தாண்டு சலுகையை அறிவித்து இருக்கிறது. ஜியோ பிரீபெயிட் சேவையை பயன்படுத்துவோருக்கு இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பழைய வருடாந்திர பிரீபெயிட் சலுகைகளை ஜியோ மாற்றியமைத்துள்ளது.

இந்த அறிவிப்பு காரணமாக ஜியோ புத்தாண்டு சலுகையில் பயனர்களுக்கு 24 நாட்கள் வரை கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. நீண்ட கால பிரீபெயிட் ரிசார்ஜ் சலுகையான ரூ. 2,999-இல் கூடுதலாக 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

 

அந்த வகையில், பயனர்கள் வழக்கமான 365 நாட்கள் இன்றி கூடுதலாக 24 நாட்கள் வரை நீண்ட கால சலுகையை பயன்படுத்தலாம். இதன் மூலம் வருடாந்திர ரிசார்ஜ் சலுகையில் பயனர்களுக்கு மொத்தத்தில் 389 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்களும் வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இவைதவிர ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் போன்ற சேவைகளும் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News