உலகம்

அவர்களிடம் பணம் இல்லை.. சீண்டிய மஸ்க் - பதிலடி கொடுத்த சத்ய நாதெல்லா - சூடுபிடிக்கும் 'ஸ்டார்கேட்'

Published On 2025-01-25 12:20 IST   |   Update On 2025-01-25 14:13:00 IST
  • இந்தப் பணம் அனைத்தும் ஏஐ தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு அல்ல
  • ஆனால் மைக்ரோசாஃப்ட், ஓபன் ஏஐ... என்று டிரம்ப் அவர்களை சீண்டும் விதமாக பதிவிட்டிருந்தார்.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்டார்கேட் என்ற ஏ.ஐ. திட்டத்தை அறிவித்தார்.

ஓபன் ஏஐ, ஜப்பானிய நிறுவனமான SoftBank மற்றும் மைக்ரோசாஃப்டின் கிளவுட் நிறுவனமான Oracle ஆகியவற்றின் பங்களிப்பில் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை உருவாக்கும் திட்டமே ஸ்டார்கேட்.

ஸ்டார்கேட் திட்டம் மூலம் மேற்கூறிய நிறுவனங்கள் உதவியுடன் அமெரிக்காவில் ஏஐ உள்கட்டமைப்பு உருவாக்கத்துக்கு 500 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்படும் என்று டிரம்ப் கூறினார்.

ஆனால் எக்ஸ், ஸ்பெஸ் எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றின் உரிமையாளரும் டிரம்பின் கூட்டாளியுமான எலான் மஸ்க், அவர்களிடம் [அந்த நிறுவனங்களிடம்] அவ்வளவு பணம் இல்லை என்று எக்ஸ் பதவில் தெரிவித்திருந்தார். SoftBank நிறுவனம் 10 பில்லியன் வரை தரும், ஆனால் மைக்ரோசாஃப்ட், ஓபன் ஏஐ... என்று மஸ்க் அவர்களை சீண்டும் விதமாக பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் CNBC செய்தி நிறுவன நேர்காணலின் போது, மஸ்க்கின் கூற்றுகளுக்கு பதிலளித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் சத்ய நாதெல்லா, என்னால் 80 பில்லியன் டாலர்கள் வரை [ஸ்டார்கேட் திட்டத்தில்]செலவழிக்க முடியும் என்று தெரிவித்தார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நம்பலாம். இந்தப் பணம் அனைத்தும் ஏஐ தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு அல்ல, ஆனால் நிஜ உலகத்திற்காக பயனுள்ள விஷயங்களை உருவாக்குவதே என்றும் அவர் தெரிவித்தார்.

அவர்களிடம் பணம் இல்லை என எலான் மஸ்க் கருத்தை ஓபன் ஏஐ சிஇஓ சால்ம் ஆல்ட்மேனும் நிராகரித்துள்ளார். ஸ்டார்கேட் திட்டத்திற்கான ஏஐ பரிசோதனையை வேலைகள் ஏற்கனவே தாங்கள் தொடங்கிவிட்டதாகவும், அதை மஸ்க் வந்து பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.  

Tags:    

Similar News