'போஸ்' கொடுக்க ஆசைப்பட்டு பாம்பிடம் கடி வாங்கிய இளம்பெண்
- வலியில் துடித்த ஷ்கோடலேரா பாம்பை தரையில் வைத்துவிட்டு தப்பினார்.
- வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 5 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.
சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் தங்கள் வாழ்வில் நடைபெறும் செயல்களை வீடியோ எடுத்து பதிவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ரஷியாவை சேர்ந்த ஷ்கோடலேரா என்ற இளம்பெண் பாம்பை கையில் வைத்து விளையாடிய காட்சிகளை வீடியோ எடுத்துள்ளார்.
அப்போது அவர் கையில் பாம்பை பிடித்து கொண்டு போஸ் கொடுப்பது போன்று வீடியோ தொடங்குகிறது. உற்சாகமிகுதியில் ஷ்கோடலேரா பாம்பை மேலே தூக்கிய போது திடீரென பாம்பு அவரின் மூக்கை கடித்தது. இதனால் வலியில் துடித்த ஷ்கோடலேரா பாம்பை தரையில் வைத்துவிட்டு தப்பினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 5 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. நெட்டிசன்கள் பலரும் ஷ்கோடலேராவின் செயலை விமர்சித்து பதிவிட்டனர். ஒரு பயனர், பணம் சம்பாதிப்பதற்காக விலங்குகளை பொம்மையாக பயன்படுத்த வேண்டாம் என பதிவிட்டிருந்தார். மற்றொரு பயனர், இதுபோன்று பாம்புகளை வைத்து விளையாட யார் அனுமதித்தார்கள்? இது மிகப்பெரிய தவறு என பதிவிட்டிருந்தார்.