இந்தியாவின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறோம்.. அமெரிக்கா குடியரசு தின வாழ்த்து
- இந்தியா-அமெரிக்க உறவுகள் தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது.
- இந்தியர்களுக்கு அமெரிக்கா சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நாட்டின் 76-வது குடியரசு தின விழா நாடு முழுக்க கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். மேலும், சிறப்பு அணிவகுப்புகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் அமெரிக்கா குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா-அமெரிக்க உறவுகள் தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது.
குடியரசு தினத்தைக் கொண்டாடும் இந்தியர்களுக்கு அமெரிக்கா சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்தியா அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் இந்த நாளில், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் அடித்தளமாக நீடித்திருக்கும் இந்தியாவின் முக்கியத்துவத்தை நாங்களும் அங்கீகரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.