டென்னிஸ்
மியாமி ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஆண்டி முர்ரே வெற்றி
- மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- முதல் சுற்றில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே வெற்றி பெற்றார்.
வாஷிங்டன்:
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, இத்தாலியின் மேட்டியோ பிரெட்டெனியுடன் மோதினார்.
இதில் ஆண்டி முர்ரே முதல் செட்டை 4-6 என இழந்தார். இதனால் சுதாரித்த முர்ரே அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.