டென்னிஸ்
ஈஸ்ட்போர்ன் டென்னிஸ் போட்டி: 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் பிரிட்ஸ்
- ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது.
- இதில் அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
லண்டன்:
ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ், ஆஸ்திரேலியா வீரர் மேக்ஸ் பர்செலுடன் மோதினார்.
இதில் பிரிட்ஸ் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். பிரிட்ஸ் பெறும் 3-வது சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.